இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி(Virat Kholi) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி நேற்று (29) இலங்கையை வந்தடைந்தார்.
இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மேலும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இந்தியா 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.