இலங்கை காவல்துறையின் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் நிலவுவதால், அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.