இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்: பல குழப்பத்தின் பின் எடுக்கப்பட்ட முடிவு

0
125

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக SLC மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தசுன் ஷனக தான் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த போதும் அவரே இலங்கை அணியின் தலைவராக செயற்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததையடுத்து அணித்தலைவரை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை தலைவராக இருந்த தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தலைவர்
இன்றைய தினம் காலை அவர் அழைக்கப்பட்டதாகவும், தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் பதவி விலகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று பிற்பகல் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here