இலங்கை – ஜிம்பாப்வே இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

0
69

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி பிற்பகல் 2.30 இற்கு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை (06) நடத்தப்பட்ட முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 09 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி மழைபெய்தது.

இதனைத் தொடர்ந்து போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here