இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்: வெளியானது அறிவிப்பு

0
26

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.

கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.டெஸ்ட் அணியின் உபத் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டி20 அணியின் தலைவராக வனிது ஹசங்க கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோன்று ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்தும் குசல் மெண்டிஸ் செயல்படுவார் எனவும் உபுல் தரங்க அறிவித்துள்ளார். சிம்பாவே தொடரில் குசல் மெண்டிஸே அணியின் தலைவராக செயல்படுவார் எனவும் உபுல் தரங்க கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here