மகளிருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை தேசிய மகளிர் அணிக்கு பணப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளயில் இன்று (28.07.2024) நடைபெற்ற ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.
இதனைத் தொடர்ந்து இலங்கை மகளிர் அணிக்கு ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு இந்த விசேட பரிசுத் தொகையை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் அணி ஆசிய கிண்ணம் ஒன்றை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது