நத்தார் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் இரண்டு நாட்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சி சாலையைப் பார்வையிடுவதற்கு குழந்தைகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலசவ அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை நாட்களையொட்டி வன விலங்குள் எங்கள் நண்பன் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விலங்கியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு உயிரியல் பூங்காவை இலவசமாக பார்வையிட வாய்ப்பு அளிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் தினமான எதிர்வரும் 25ம் திகதி மிருகக்காட்சிசாலையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.