மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றி பெற வேண்டும்.
இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கோவிட் தொற்று மற்றும் அதனால் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, முடக்கம் என்பவற்றால் கடந்த இரு வருடங்களாக பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் குறித்த விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாது பெரும் சிரமத்திற்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது.