இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட தேர்தல் சுவரொட்டிகள்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

0
24

இதுவரையான காலப்பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 65 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here