இளைஞர் சமூகம் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பு

0
34

இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73 பேர் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த குழு 15 முதல் 24 வயதுக்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1ஆம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. 2018 முதல், 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர் சமூகத்தில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

2022 இல் புதிய எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் இளைஞர்கள். அதாவது 12 சதவீதம். அவர்களில் 66 பேர் ஆண்கள். எனவே, இளைஞர்களிடையே எச்.ஐ.வி. தடுப்பு மிகவும் முக்கியமானது. நம்பகமான துணையுடன் உடலுறவு கொள்ளுங்கள். பிற தொடர்புகள் இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆணுறையைப் பயன்படுத்துவது முக்கியம். எங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே 41 கிளினிக்குகள் இலவசமாக ஆணுறைகளை வழங்குகின்றன..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here