தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தில் 5 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் மிக பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில், முதல் இடத்தை நடிகர் தனுஷ் பிடித்து சாதனைப் படைத்தார். 2-வது இடத்தில் ஆலியா பட்டும், 3வது இடத்தில் ஐஸ்வர்யா ராய், 5-வது இடத்தில் சமந்தாவும் 9 மற்றும் 10வது இடத்தில் அல்லு அர்ஜுனும், யஷ்ஷும் இடம் பிடித்தனர்.
சமூகவலைத்தளத்திலும், தமிழ் சினிமாவிலும் பரபரப்பாக பேசப்படுவது அடுத்து யார் சூப்பர்ஸ்டார் என்பதுதான். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியின்போது, ‘அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என்று கொளுத்தி போட்டுவிட்டார். இதனால், திரையுலகமே பற்றிக்கொண்டது.
விஜய் ரசிகர்கள் எல்லோரும் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்று பேச, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் ஒருவருக்கு மட்டுமே என்று சமூகவலைத்தளங்களில் வாக்குவாதமே நடத்தினர்.
ஆனால், இந்த நடிகர் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பல வருடங்களுக்கு முன்பே தனுஷ் சொல்லியுள்ளார். இத்தகவலை தனுஷின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான வெற்றிமாறனே தெரிவித்துள்ளார்.
ஒரு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,
ஒருமுறை தனுஷ் என்னை தொலைப்பேசியில் அழைத்து. உங்கள் உதவியாளர்களிடம் ஒரு காமெடி கதை இருந்தால் என்னிடம் அனுப்புங்கள் என்றார். நான் ‘நீங்கள் காமெடி செய்யப்போகிறீர்களா?’ என்று கேட்டேன்.
அதற்கு எனக்கு இல்லை சிவகார்த்திகேயனுக்கு என்று சொன்னார். சிவகார்த்திகேயனை வச்சு படம் எடுக்க போகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு தனுஷ் ‘சார். அவர் நல்ல திறமையான நடிகர். சூப்பர் ஸ்டார் ஆகும் அளவுக்கு அவருக்கு திறமை உள்ளது என்று புகழந்து தள்ளினார்.
துவக்கத்தில் தனுஷும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.