இஸ்ரேலிய இராணுவத்தின் மிருகத்தனம் : நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட கொடூரம்

0
17

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தை மீது இராணுவ நாயை ஏவிவிட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த.4-ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் இருந்த நான்கு வயது சிறுவன் இப்ராஹிம் ஹஷாஷ்-ஐ இராணுவ நாய் சிறுவனுக்கு இரத்தம் ஊற்றுமளவுக்கு நாய் தொடர்ந்து கடித்துள்ளது.

மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான். பாதிக்கப்பட்ட சிறுவன் இப்ராஹிமுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here