தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, இராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இஸ்ரேலுக்கு எதிரான நமது எதிர்வினைக்குப் பிறகு, இதுபோன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களை தூர விலக்கிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.