இ.தொ.காவின் மகளீர் தின நிகழ்வு பற்றிய விசேட கலந்துரையாடல்.

0
148

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு பற்றிய விசேட கலந்துரையாடல் தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.இ.தொ.காவின் உபத்தலைவர் பழனி சக்திவேல் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தலவாக்கலை நகரசபை தலைவர் பாரதிதாஸன்,அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன்,இ.தொ.கா.உபச்செயலாளர் சச்சுதானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதாவது இம்முறை இ.தொ.காவின் மகளீர் தின நிகழ்வு மாநில ரீதியாக நடைபெற இருப்பதால் ஒவ்வொரு மாநிலங்களிலுமான கலந்துரையாடல் இ.தொ.காவின் மாநில முக்கியஸ்தர்களூடாக இடம்பெற்றது.அந்தவகையில் இடம்பெற்ற இம்மாநில கலந்துரையாடலில் தலவாக்கலை மாநில மகளீர்தினம் தலவாக்கலையில் எதிர்வரும் 13ம் திகதி கொண்டாட இருப்பதாக இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here