அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.
சமீபத்தில் இ.தொ.காவிலிருந்து அனைத்து பொருப்புகளிலிருந்தும் விலக்கப்பட்ட அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால ஸ்ரீசேனாவையும் செயலாளர் தயாஸ்ரீ ஜயசேகர இருவரையும் சந்தித்து உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டதோடு விரைவில் நடபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதகதியில் முன்னெடுக்க ஒத்துழைப்பு தருவதாக மைத்திரிபால ஸ்ரீசேன உறுதியளித்ததாகவும் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்