அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றாக சேதப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஐநாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தின் மூலம் ரபேல் க்ரோஸி ஈரானின் அணுசக்தி திட்டம் பல தசாப்தகால பின்னடைவை சந்தித்துள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டுள்ளார்.
சிபிஎஸ் நியுசிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுஉலைக்கான சேதம் குறித்து பல்வேறு விதமான மதிப்பீடுகள் காணப்படுவது குறித்த கேள்விக்கு அவர்களிடம் உள்ள திறமைகளை( ஈரான்) கருத்தில் கொள்ளும்போது சில மாதங்களில் மையவிலக்கு சுழற்சி இயந்திரம் செயற்பட்டு அவர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அல்லது அதற்கும் குறைவானதை தயாரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக பேசுவதென்றால் எல்லாம் காணாமல்போய்விட்டது எதுவும் இல்லை என தெரிவிக்க முடியாது என ரபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார்.
அணுஉலைகள் சேதமடைந்துள்ளது உண்மை ஆனால் அவை முற்றாக சேதமடையவில்லை ஈரானிடம் திறமைகள் உள்ளன,தொழில்நுட்ப திறமைகள் உள்ளன அவர்கள் விரும்பினால் அவர்கள் மீண்டும் ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.