ஈரானில் 37 இலங்கையர்கள் சிக்கியிருப்பதாக தகவல்

0
133

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் வெளியுறவு, வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஈரானில் 41 இலங்கையர்கள் இருந்ததாகவும், அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண சூழலில் சிக்கியவர்களில் , ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 05 அதிகாரிகளும் அடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இவரர்களில் நான்கு இலங்கையர்கள் நாளை (23) துருக்கிய எல்லை வழியாக வெளியேற உள்ளனர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் சிக்கித் தவிப்பதாக தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் ஈரானியர்களை மணந்தவர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here