ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து “முற்றிலும்” பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் செயற்பாடுகளில் ஈடுவதாக உளவுத்துறை தீர்மானித்தால் “கேள்விக்கு இடமின்றி” அந்நாடு தாக்கபப்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டது, விரைவாக போர் நிறுத்தத்தை நாடும் நோக்கில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது.
இதேநேரம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கவில்லை என்று கூறினார், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி தளங்கள் “அழிக்கப்பட்டுவிட்டன” என்ற தனது கருத்தை மீண்டும் தெரிவித்தார்.