ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது நிகழ்ந்த துயரம் : 45 பேர் பலி

0
58

தென்னாபிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோரியா நகரில் நடைபெற்று வரும் ஈஸ்டர் ஆராதனையில் பங்கேற்பதற்காக சம்பந்தப்பட்ட குழுவினர் கபோரோனில் இருந்து பேருந்தில் பயணித்துள்ளனர்.இதன்போது ஜோகன்னஸ்பேர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

165 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா மக்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here