உக்ரைனில் முக்கிய அணை குண்டு வீசி தகர்ப்பு

0
93

ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956ஆம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது.

இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை ரஷ்ய இராணுவம் தகர்த்துவிட்டதாகவும், இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் 5 மணி நேரத்துக்குள் அபாய அளவை எட்டும் என கெர்சன் பகுதி இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் புரோகுதின் கூறியுள்ளார்.

இதனால் தெற்கு உக்ரைனின் கக்கோவ்கா பகுதியில் உள்ள 10 கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கெர்சன் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here