இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி ஒல்லியாவது. ஒருவரது தலைமுடி ஒல்லியாவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது போதுமான பராமரிப்பு இல்லாமை, ஹேர் ஸ்டைலிங் பொருட்கள், கெமிக்கல்கள் கலந்த பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பது, மாசுபாடு மற்றும் சூரியக்கதிர்களின் தாக்கம் போன்றவை ஆகும். ஒருவருக்கு தலைமுடி ஒல்லியாவதற்கு முன் தலைமுடி அதிகம் கொட்டும். அப்படி கொட்டும் போதே, அதை கவனித்து தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்தால், இந்நிலையைத் தவிர்க்கலாம்.
தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒருசில எண்ணெய்கள் உள்ளன. அந்த எண்ணெய்கள் அனைத்துமே நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த எண்ணெய்களை ஒருவர் தலைமுடி அதிகம் உதிர்வதாக உணரும் போதே பயன்படுத்தத் தொடங்கினால், முடி அடர்த்தி குறைந்து எலிவால் போன்று ஒல்லியாவதைத் தடுக்கலாம். இப்போது அந்த எண்ணெய்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் கெட்டியான மற்றும் ஊட்டமளிக்கும் எண்ணெய் ஆகும். இது ஸ்காப்பிற்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, நல்ல ஊட்டத்தையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. முக்கியமாக இந்த எண்ணெயில் மாய்ஸ்சுரைசிங் பண்புகள் இருப்பதல், இது ஸ்கால்ப் வறட்சியைப் போக்கி, நல்ல அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே உங்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகம் இருப்பதாக உணர்ந்தால், இந்த எண்ணெயை உங்கள் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
2. ஆலிவ் ஆயில்
தலைமுடியின் வளர்ச்சிக்கும், தலைமுடி ஒல்லியாவதைத் தடுக்கவும் உதவும் மற்றொரு எண்ணெய் தான் ஆலிவ் ஆயில். ஏனெனில் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் ஒலியிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் முடியின் வேரில் இருந்து நல்ல ஊட்டத்தை அளிக்கும். இது தவிர இந்த எண்ணெய் முடி உதிர்விற்கு மற்றொரு காரணமாக இருக்கும் பொடுகுத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த ஆலிவ் ஆயிலை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், முடியின் வறட்சி நீங்குவதோடு, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.
3. வெங்காய எண்ணெய்
வெங்காயம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது. எனவே இந்த வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். அதுவும் வெங்காய எண்ணெயில் சல்பர் அதிகம் உள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, தலைமுடி ஒல்லியாவதைத் தடுக்கும். இது தவிர, வெங்காய எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அடர்த்தியான மற்றும் வலுவான தலைமுடியைப் பெற உதவுகிறது.
4. வேப்ப எண்ணெய்
பழங்காலம் முதலாக தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் எண்ணெய் தான் வேப்ப எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகுத் தொல்லையை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. மேலும் இந்த எண்ணெய் கொழுப்பு அமிலங்களால் செறிவூட்டப்பட்டுள்ளதால், வேகமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முக்கியமாக இந்த எண்ணெய் முடி உடைவதையும் உதிர்வதையும் தடுப்பதில் சிறந்தது.
5. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு பல நன்மைகளை வழங்கும் மற்றும் எளிதில் கிடைக்கும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு நல்ல ஊட்டமளித்து, தலைமுடியை வலுவாக்கும். இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதோடு, முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
6. பாதாம் எண்ணெய்
வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரிசெய்வதில் பாதாம் எண்ணெய் சிறந்தது. ஏனெனில் இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான புரோட்டீன்கள் உள்ளன. மேலும் இதன் ஊட்டமளிக்கும் பண்புகளால் இது ஒரு நேச்சுரல் கண்டிஷனராகவும் செயல்படுகிறது. இந்த எண்ணெயில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், இது முடி உதிர்வு மற்றும் முடி ஒல்லியாவதை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கும் தலைமுடி அதிகம் உதிர்ந்து ஒல்லியாகிக் கொண்டிருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களுள் ஒன்றை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.