உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளை போக்குமா கருஞ்சீரகம்…?

0
120

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகதை வெண்ணீர் மற்றும் தேன் கலந்து காலை, மாலை குடித்து வரகற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும். நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் அரை தேக்கரண்டி பூண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை கரைக்கும் சக்தி கொண்டது.

கருஞ்சீரகம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் அகன்று விடும். மற்றும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கருஞ்சீரகம் சீராக்க வல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு. மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். வயிற்றில் உண்டாகும் சமிபாட்டு கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.

கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை கொண்டது. அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய் உதவியாக இருக்கும். வழுக்கை தலையிலும் முடியை வளர வைக்கும் ஆற்றல் கருஞ்சீரக எண்ணெக்கு உண்டு. தலைவலியால் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தி வந்தால் இதிலிருந்து விடுபடலாம். முடி வளர்ச்சி, பொடுகு, கிருமி தொற்று, பலவீனமான முடி மற்றும் நரை முடி போன்ற பல பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் கருஞ்சீரகம் எண்ணெய்க்கு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here