உடல் எடையைக் குறைக்க வேண்டுமா.. வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க

0
49

உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க பெருஞ்சீரகத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்று அனைத்து தரப்பினரின் பிரச்சினை என்னவெனில் உடல் எடை மற்றும் தொப்பை தான். இவற்றினை குறைப்பதற்கு டயட், உடற்பயிற்சி என பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க சிரமப்படுபவர்கள் பெருஞ்சீரக தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இவை உடல் எடையை குறைப்பதுடன், உடம்பை குளிர்ச்சியாகவும் வைக்கின்றது.

செரிமான பிரச்சினையை தீர்ப்பதுடன், கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை சுத்தமாக்கவும், உடம்பில் கொழுப்பு அதிகம் சேராமல் தடுக்கின்றது.

மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் காலையில் எழுந்ததும் பெருஞ்சீரக தண்ணீரை குடிக்கவும்.

ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால், வயிறு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பெருஞ்சீரக தண்ணீர் உடலையும், மனதையும் அமைதிப்படுத்த உதவும் மசாலா பொருள் ஆகும். அலுவலகம் அல்லது வேலையில் ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டால், நாள் முழுவதும் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், வாய் மற்றும் சுவாசத்தின் துர்நாற்றத்தை போக்குகின்றது. ஆம் இதிலுள்ள நறுமணம் மிகுந்த எண்ணெய் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நம்முடைய வாயில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதோடு வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்க்கவும்.குறித்த தண்ணீரை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here