உத்தர பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழப்பு

0
39

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 120 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிரா மத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போதே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பலர் சனநெரிசலில் கீழே வீழ்ந்து நசுக்குண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், உட்பட பலர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here