2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக நடைபெற்று வருகிறது.உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்ய முடிந்தால் 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.