லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் லுணுகலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணத்துக்கான காரணம் கண்டறியாத போதிலும் விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பதுளை நிருபர்-