உலகக்கிண்ண தொடரில் படுதோல்வியுடன் வெளியேறியது இலங்கை அணி

0
63

2024 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 125 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்ததுடன் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதேபோல், டஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ரி20 உலகக் கிண்ண தொடரின் டி குழு போட்டியில் இலங்கை (srilanka) – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய போட்டி (8.6.2024) க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி (Bangladesh) முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க (c), மஹீஷ் தீக்ஷன அல்லது துனித் வெல்லாலகே, நுவன் துஷார, மதீஷ பத்திரண ஆகியோர் விளையாடவுள்ளனர்.

மேலும். பங்களாதேஷ் அணி சார்பாக தன்ஸித் ஹசன், சௌம்யா சர்க்கார், நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தௌஹித் ரிதோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அல்லது லிட்டன் தாஸ், மெஹெதி ஹசன், ரிஷாத் ஹொசெயன், தன்ஸிம் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

தென் ஆபிரிக்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றிபேற்றால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here