இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி 17 வருடங்களுக்கு பின்னர் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக Bridgetown இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.இந்திய அணி சார்பில் Virat Kohli அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற்றதுடன், Axar Patel 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Keshav Maharaj மற்றும் Anrich Nortje தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ௐட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Heinrich Klaasen அதிகபடியாக 52 ஓட்டங்களையும் Quinton de Kock 39 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Hardik Pandya 03 விக்கெட்டுக்களையும், Arshdeep Singh மற்றும் Jasprit Bumrah ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இந்திய அணி தென்னாபிரிக்க அணியை 07 ஓட்டங்களால் வீழ்த்தி 17 வருடங்களுக்கு பின்னர் இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிண்ணத்தை வென்றுள்ளது.