உலகக் கோப்பை கால்பந்து – 68 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை!

0
1
dailythanthi

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வெறும் 33 போட்டிகளிலேயே 100 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

33 போட்டிகளில் மைல்கல்

சுவீடனுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ அடித்த கோல், 100-வது கோலாக பதிவானது. இதன் மூலம் கடந்த 68 ஆண்டுகளில் மிக குறைந்த போட்டிகளில் 100 கோல்கள் அடிக்கப்பட்ட உலகக் கோப்பை தொடர் என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதல் கோல்

கடந்த 12-ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் குய்னோனஸ் இந்த தொடரின் முதல் கோலை பதிவு செய்தார். அந்த ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1954 சாதனை

1954-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெறும் 20 போட்டிகளிலேயே 100 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தன. அந்த தொடரில் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here