பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமானது என இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை’ என்ற வரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக, இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையை கெளரவிக்கும் வகையில் உலகெங்கும் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பூமிக்கு இன்னோரு உயிரை கொண்டுவர தன் உயிரை பனையம் வைக்கும் பெண்மையின் தைரியத்திற்கு பெயர் தாய்மை. அந்த தாய்மையை போற்றும் இந்த உன்னத நாளில் அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.