5நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் பலர் இன்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தங்கள் பிரசாரங்களைத் தொடங்கும் போது மிகவும் சிறப்பாக இருக்க தான் வாழ்த்துவதாக முன்னாள் அவர் தெரிவித்துள்ளார்.