சமூக மாற்றத்திற்கான கருத்தியல்களை உருவாக்குவதில் எழுதுகோல் ஏந்துவோர் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சனைகள் சார்ந்த சார்பு தன்மைகளை இனம் கண்டு தீர்வை முன்வைக்கும் எதிர்பார்ப்பில் காத்திரமான பயிற்சிப்பட்டறைகளை மலையகம் தழுவிய ரீதியில் நடாத்துவதற்கு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும், ஊடக நெறிமுறைக்கும், சமூக நீதிக்குமான ஊடகவியலாளர் இயக்கமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்து வருகின்றது.
சமூக மாற்றத்திற்கான சாதக தன்மைகளை தோற்றுவிப்பதில் “எழுதுகோல் ஏந்துவோர் எதிர்நோக்கும் சவால்கள்”;எனும் தலைப்பில் இடம்பெறவிருக்கும் இச்செயலமர்வுளில் முதல் நிகழ்வு பதுளை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இம்மாதம் 30ம் திகதி பண்டாரவளை சென் தோமஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இப்பயிற்சிப்பட்டறையில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள், படைப்பிலக்கியவாதிகள், எழுத்தார்வம் கொண்டவர்கள் இதில் பங்கு பற்ற முடியும். ஊடகத்துறை, படைப்பிலக்கியசார் விற்பனர்கள் சிறப்புரைகளை வழங்குவார்கள். பங்குபற்றுனர்களுக்கு தமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.
பொதுவாக,ஊடகத்துறையினர்,இலக்கியவாதிகள், ஆரம்பநிலை எழுத்தாளர்கள் தேசிய சமூக ரீதியில் சவால்களுக்கு உட்படுத்தப்படும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஆக்கபூர்வமாக வெளிக்கொணர்வுகளை எவ்வாறு சமூகத்தினிடையே எடுத்துச் செல்லலாம் என்பது குறித்ததான ஆய்வுநிலை கருத்தியல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக, இவ்வாறான பயிற்சிப்பட்டறைகள் அமைய வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு.
இப்பயிற்சிப்பட்டறையில் பங்குபெற விளையும் ஊடகவியலாளர்கள், எழுத்தார்வம் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இவ்விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித்திகதி 25.09.2017 ஆகும். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் இம்முயற்சி வெற்றிபெற எழுதுகோல் ஏந்துவோரிடமிருந்து ஒத்துழைப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் யாவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், 368/6 பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07 தொலைநகல் 011 2671721, மின்னஞ்சல் communication @ nccslorg தேவதாஸ் சவரிமுத்து 071 6876548 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என இம்மன்றம் மேலும் கேட்டுள்ளது.