ஊனமுற்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : 3 பேர் படுகாயம்! ஆவரங்காலில் சம்பவம்

0
176

ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியின் இன்று காலை பத்து மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3பேர் படுகாயமடைந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர்களின் கால்கள் முறிவடைந்ததாக தெரியவருகின்றது.

ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் மூன்று சில்லு சைக்கிளில் தெருவால் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் கால்களில் படுகாயமடைந்ததால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் மூன்று சில்லு சைக்கிளில் வந்த ஊனமுற்ற முதியவர் தெருவில் காயங்களுடன் கிடக்கும் போதும் எவரும் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

யாரில் பிழை சரி என்று பார்ப்பதற்கு அப்பால் மனிதாபிமானமுறையில் ஊனமுற்ற முதியவரைப் பாதுகாக்காது அங்கு நின்றவர்கள் செயற்பட்டதாகத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here