ஊழியர் சேமலாபநிதி உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும்; இதொகா கோரிக்கை !

0
98

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரசபெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளாண்டேன் ஆகியன நிர்வகிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மறறும் சேவைகாலப்பணம் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

காலந்தாழ்த்தாது உரிய நடவடிக்கை – தேவை

தேசிய தொழில் ஆலோசனைசபைக்கூட்டத்தில் சட்டத்தரணி மாரிமுத்து கோரிக்கை

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரசபெருந்தோட்டயாக்கம், மற்றும் எல்கடுவ பிளாண்டேன் ஆகியவற்றில் நிர்வகிக்கும் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கைநிதி மற்றும் சேவைகாலப்பணம் ஆகியன இதுவரையிலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் தமது இறுதிக்கால ஓய்வூதியத்தை எதிர்பார்த்த வண்ணம் சொல்லொணத்துயரங்களுக்கு மத்தியில் ஆளாகி வருவது வேதனைக்குரியது என இ.தொ.கா நிர்வாக உப தலைவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து தேசிய தொழில் ஆலோசனை சபையின் மாதாந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (13) தொழில் அமைச்சின் தொழிலுறவுகள் அமைச்சர்
ஜோன் செனவிரட்ன, மற்றும் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரது தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தோட்டத் தொழிலாளர்கள் தமது ஓய்வு காலத்தின் போது தமக்கு கிட்ட வேண்டிய கொடுப்பனவுகள் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரையிலும் தமக்குச் சேரவில்லையே என கவலையடைகிறார்கள். அதனை நம்பி வாழ்ந்து வரும் இவர்கள் பணத்தைப் பெறாமலேயே மரணீத்ததும் உண்டு. எனவே, காலக்கிரமத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து கொடுப்பனவுகளையும் இந்நிறுவனங்கள் வழங்க தொழில் அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

ஒவ்வொரு தொழில் தேசிய சபைக் கூட்டத்திலும் இந்நிறுவனங்கள் எவ்வாறான நிலுவைப் பணம் செலுத்தி இருக்கின்றன என தொழிற்சங்களுக்கு தொழில் அமைச்சு அறிவிக்க வேண்டும் என வாதாடினார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இத்தோட்டங்களின் காணிகளை வெளியாருக்கு துண்டுகளாகப் பகிர்ந்தளிக்கவும், குத்தகைக்குவிட எத்தணிக்கும் தோட்ட நிர்வாகங்கள் குறித்து நாம் கவலையடைகின்றோம்.

காலம்காலமாக, தலைமுறைதலைமுறையாக தோட்டங்களிலேயே நம்பி வாழ்ந்து வரும் இத்தொழிலாளர்களுக்கே இக்காணிகள் முதல் உரிமை அளிக்க வேண்டும் என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் அமைச்சர் று.னு.து.செனவிரட்னவின் கருத்துரையின் போது காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரசபெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளாண்டேன் ஆகியவற்றின் பிரதானிகளை அழைத்து மேற்குறித்த விடயங்களுக்கு ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்தப் போவதாக அமைச்சர் உறதியளித்துள்ளதாகவும் சட்டத்தரணி கா.மாரிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்

இதொகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here