ஊவாமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆர்ப்பாட்டம்!!

0
156

ஊவாமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆர்ப்பாட்டம்!!

பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய அதிபர் பவானி ரகுநாதனை முழங்காலிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மல்லியப்பு சந்தியில் 31.01.2018.புதன் கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது காலை 11மணிமதல் பிற்பகல் 12வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது. ஊவாமாகாண அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்கவினால் அண்மையில் பதுளை மகளிர் மாகாவித்தியாலயத்தின் அதிபரை முழங்காலிட இடவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊவாமாகண அமைச்சில் இருந்து வெளியேற வேண்டுமென வழியுருத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ராஜாராம்  சோ .ஸ்ரீதரன் சரஸ்வதி சிவகுரு மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

07 (1) 08 13 03

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹட்டன் பொலிஸாரினால் ஆர்பாட்டத்தினை சாதாரணமுறையில் நடத்தவேண்டும் என வழியுறுத்தி நீதிமன்ற தடைஉத்தரவு பெறுவதற்கு முயற்சி செய்த போதும் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு வழங்கபடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here