பதுளையில் முன்னணி மகளிர் பாடசாலை ஒன்றின் அதிபரை முழங்காலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது முன்னைய ஆட்சிக்காலத்திலும் இது போன்று அரசியல் வாதி யொருவர் ஒரு ஆசிரியைக்கு அநீதியிழைத்திருந்தமை மறக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் இவ்வாறான செயற்பாடில் ஈடுபட்டுள்ளமை கண்டிக்க கூடியதும்,வருந்த கூடியதும் ஒன்றாகும்.
அரசியல் வாதிகள் என்றால் எதனையும் செய்யலாம் யாரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என நினைப்பார்களாயின் அது மிக பெரிய தவறாகும்.அரச அலுவலர்களை கட்டுப்படுத்த தாபனவிதிக்கோவை ஒன்றுள்ளது இதனடிப்படையில் குற்றமிழைக்கும் அதிகாரிகளை ஏதொவொருவகையில் தண்டிக்கஇயலும்,ஆனால் பல்வேறு செல்வாக்கின் அடிப்படையில் அடிப்படை கல்வி தகுதிகூட இல்லாதவர்கள் அரசியல் வாதிகளாக வந்து கற்றோரை மட்டம் தட்ட பார்ப்பது எவ்வகையிலும் நியாயமற்றது.
சட்டத்தை தம்கையில் எடுத்துக்கொண்டு அடாவடித்தனம் செய்வார்களாயின் அவர்கள் யாராயினும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே இது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளருக்கும்,கல்வியமைச்சருக்கும்,பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும் அறியதந்து தகுந்த நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்க்கிறோம்.
அரசியல்,கட்சி,இனம்.மொழி,தொழிற்சங்கம் என்பவற்றுக்கு அப்பால் நாம் ஆசிரியர்கள் சமூகத்தின் சிற்பிகள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று பட்டு அராஜகவாதிகளுக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பில் ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேசிவருகிறோம்.கட்சி,தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றிணைந்து போராடுமாறு அனைத்து கல்வி சமூகத்தினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சி.இரவிந்திரன்
பொதுச்செயலாளர்
மலையக ஆசிரியர் முன்னணி
22.01.2018