ஊவா மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை!!

0
140

பதுளை மகளிர் பாடசாலையின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பதுளை நீதவான் நீதிபதி நயந்த சமரதுங்க 23.01.2018 அன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் மகளீர் பாடசாலையின் பெண் அதிபர் மண்டியிட சம்பவம் தொடர்பில், வாக்கு மூலம் வழங்குவதன் பொருட்டு, முதலமைச்சர் 23.01.2018 அன்று சட்டத்தரணியின் ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானார்.

Photo (1) Photo (3)

முன்னிலையான, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here