ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது!

0
149

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்களிடையே சின்னம்மை நோய் பரவியதை அடுத்து, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 தினங்களுக்குள் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கும், வெளி விடுதியில் உள்ள 8 மாணவர்களுக்கும் அம்மை நோய் பரவியுள்ளது

இந்நிலையில், ஏனைய மாணவர்களுக்கும் இந்நோய் பரவும் எனும் அச்சத்தில், குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here