எங்கள் எதிர்கால நலனுக்காக வாக்காளராக பதிவு செய்வதை உறுதி செய்யுங்கள்! : பிரிடோ சிறுவர் கழக வலையமைப்பு

0
148

இம்மாதத்தில் வாக்களர் பதிவு ஆரம்பமாகியிருக்கிறது. நாங்கள் வாக்களிப்பதால் எங்களுக்கு என்ன பயன் என்று அனேக பெற்றோர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எமது பெற்றார்கள் வாக்காளராக பதிவு செய்யாததால் அதிகம் பாதிக்கப்பபடுவர்கள் சிறுவர்களே. பெருந்தோட்ட பெற்றாரின் இந்த தவறு காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றார் சிந்திப்பதில்லை. வாக்குரிமை இல்லாததால் தான் ஒரு சமூகமாக நாம் எமது எல்லா உரிமைகளையும் இழந்தோம் என்பதை நாங்கள் கற்றிருக்கிறோம்.

வாக்காளர்களாக பதியாவிட்டால் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே பாதிக்கப்படும் என பல பெற்றார்கள் தவறாக நினைக்கிறார்கள்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நமது முதாதையர்களின் வாக்களிக்கும் உரிமையை இழந்து அரசியலில் அநாதைகளாகியதால் கல்வித்துறை, தொழில் வாய்ப்பு, சுகாதாரம், காணி உரிமை ஆகிய எல்லாவற்றிலும் நமது சமூகம் உரிமைகளை பெறமுடியாமல் பின்னடைந்துவிட்டது.

நமது சமூகத்தின் கல்வித்துறைக்கு நிதி மற்றும் வளங்கள் கிடைக்காததால் அன்றைய சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

இன்று நாம் மற்ற சமூகத்தவரை விட எல்லா விதத்திலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் கல்வியில் ஏற்றபட்ட பின்னடைவே.

நமது சமூகத்தினருக்கு நீண்டகாலமாக வாக்குரிமை இல்லாமல் இருந்ததாலேயே இந்த பின்னடைவு ஏற்பட்டது. என்பதை சிறுவர்களாகிய நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். பெற்றார்கள் வாக்காளர்களாக இல்லாவிட்டால் எங்கள் சமூகத்தின் அரசியல் பலம் குறைந்து எங்கள் கல்வித்துறைக்கு கிடைக்கும் வளங்களை கேட்டு பெறுவதில் சிரமம் ஏற்படும்.

உயர்கல்வி நிலையங்களுக்கு செல்லுதல், தொழில் வாய்ப்பு, அரசாங்கத்திடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் உரிமைகளை பெறுதல் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுதலில் கூட சிறுவர்களாகிய எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

இந்த விடயங்களை புரிந்து கொண்டு நமது பெற்றார்கள் அதிக கவனம் செலுத்தி தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

இதுவரை வாக்காளராக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து அரசியல் தொழிற்சங்கங்கள் என்பனவே வலியுறுத்தி வந்தன. ஆனால் பெற்றார் வாக்காளராக பதிவு செய்யாவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நமது சமூகத்தின் எதிர்கால சந்ததியராகிய சிறுவர்களே என்ற கருத்தை எவரும் இதுவரை வலியுறுத்தவில்லை.

இதனாலேயே சிறுவர்களாகிய நாங்கள் இப்போது இது குறித்து அக்கறை காட்டிவருகிறோம்.

எனவே சிறுவர்களாகிய எங்களின் எதிர்கால நலனில் அக்கறை காட்டி எல்லா பெற்றாரும் வாக்காளராக பதிவு செய்துகொள்ள வேண்டும்

என வலியுறுத்துகிறோம். இதே நேரத்தில் இதுவரை சிறுவர்களாக இருந்து இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வாக்காளராக தம்மை பதிவு செய்து கொள்வதும் மிக மிக முக்கியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இது விடயத்தில் நமது பெற்றார்களுக்கு தெளிவுபடுத்தி ஊக்குவிக்கும் பணிகளில் ஜுன் மாதம் முதல் பிரிடோ நிறுவத்தின் நுவரெலியா மாவட்ட சிறுவர் ஒன்றியத்தின் எல்லா சிறுவர் கழக உறுப்பினர்களும் அக்கறையுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம்.

பெற்றார் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளாததால் சிறுவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரிடோ சிறுவர் கழக வலையப்பின் தலைவர் கொட்டியாகலை பெருந்தோட்டத்தை சார்ந்த செல்வன் தனுஸ்கரன், செயலாளர் செல்வி எம். சர்மிளா ஆகியேர் சிறுவர் கழக வலைம்பு சார்பில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அக்கரபத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here