பொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிந்துள்ளது.
இதனால்பொல்கொட அணையை அண்மித்துள்ள தெற்கு பாணந்துறை, பாணந்துறை வடக்கு, பன்னபிடிய, பண்டாரகம, மொரோந்துடுவா, குருவந்தோட மற்றும் வாட்டுவா பிரதேசங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 102 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலி, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாரு அறிவித்தல் வரும் வரை செல்லவேண்டாமென எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பா. பாலேந்திரன்.