2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களிடத்தில் இருந்து எட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியில் 2018-2020 கல்வியாண்டில் உயர்தரம் கலை வர்த்தகம் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்பதற்காக விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டிருந்தது.
அவ்வாறு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக தேர்வு இம்மாதம் 22ஆம் திகதி செவ்வாய் கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாடசாலை அதிபர் எம். உதயகுமாரன் தெரிவித்தார்.
விண்ணப்பதாரிகள் தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் காலை 9.00 மணிக்கு தவறாது
சமூகம் அளிக்கவேண்டும். இதன்போது வெளிப்பாடசாலை மாணவர்கள் சாதாரணதர பெறுபேறு
பிறப்புச்சான்றிதழ் பாடசாலை விடுகை மற்றும் நற்சான்றிதழ்களை சமர்பிக்கவேண்டும்.
கலைத்துறை பாடங்களில் தமிழ் அரசியல் விஞ்ஞானம் வரலாறு நாடகம் சித்திரம் சங்கீதம் நடனம் இந்துநாகரிகம் கிறிஸ்தவ நாகரிகம் புவியியல் தகவல் தொழிநுட்பம் என்பவற்றில் மூன்று பாடங்களை தெரிவுசெய்யமுடியும்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நுன்கலை பாடங்கள் அனைத்தும் இப்பாடசாலையில் மாத்திரமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இம்முறையே முதன்முதலாக கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்படுகின்றது.
கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான போதிய ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்றமையால் உடனடியாக இம்முறை கணித
விஞ்ஞானப் பிரிவுகளை ஆரம்பிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.
எனவே சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புக்களை சரியாகக் பயன்படுத்திக்கொள்ளுவதோடு இதுவரை விண்ணப்பங்களை விண்ணப்பிக்காத வெளிபாடசாலை மாணவர்கள் மேற்படி ஆவணங்களுடன் நேர்முகம் நடைபெறும் குறித்த திகதியில் சமூகம் தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இம்மாதம் மாதம் 31ஆம் திகதி புதிய உயர்தர மாணவர்களை
உள்ளீர்க்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(அவிசாவளை நிருபர்)