எண்ணெய் தன்மையான முகம்..! இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

0
104

முகத்தில் எண்ணெய் வழிவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது அவஸ்த்தைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா?

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

மேலும் பலரும் எண்ணெய் வழிவதை தடுக்க பல்வேறு முகப்பூச்சுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இவை உண்மையில் சருமம் தொடர்புடைய நோய்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

ஆக, முகத்தில் எண்ணெய் வழிவதில் இருந்து இலகுவில் எவ்வாறு விடுபடலாம் என்பது பற்றி பார்ப்போம்..

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க கடைந்த மோரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.

15 நிமிடம் வரை காத்திருந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க 1/2 கப் தயிருடன், 1 தே.கரண்டி மஞ்சள் தூள், 1 தே.கரண்டி தேன், 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, சிறந்த தோற்றத்தைக் கொடுக்கும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர எண்ணெய் பசை நீங்கும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் விட்டு பின் நீரில் கழுவ வேண்டும்.

இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.

நெற்றி பகுதியில் முடி உதிர்வு! இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – துளசி

எண்ணெய் பசை சருமத்தினருக்கு மட்டுமின்றி, பருக்களைப் போக்கவும், இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.

அதற்கு சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து அத்துடன் ஒரு தே.கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here