நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை ஊடகத்துறையில் இணைத்து மலையகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஊடக செயலமர்வு ஒன்று (இன்று 11ம் திகதி ஹட்டன் செட்டிக்ஸ் நிறுவன மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை அருட்தந்தை லெஸ்லி பெரேரா தலைமையில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் ஊடகத்துறைக்கு வரவிருக்கும் இளைஞர்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள், புகைபடமெடுத்தல், வீடியோ ஒளிபதிவு, செய்தி சேகரித்தல், ஊடகத்துறையில் உள்ள சவால்கள் சமூக விழுமியங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் இதி;ல் கலந்துரையாடப்பட்டன.
இந்த செயலமர்வுக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் தலவாக்கலை, பொகவந்தலா, மஸ்கெலியா, உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். கண்டி மறை மாவட்ட கலை தொடர்பு நிலைய அனுசரணையில்; நடைபெற்றன. இச்செயலமர்வின் வளவாளர்களாக சவரிநாதன் நிக்கலஸ் ஊடகவியலாளர் க.சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன்