எதிர்பார்த்த ஆதரவில்லை! மொட்டுக் கட்சியை விமர்சித்த ரணில்

0
21

தாம் நினைத்த அளவு பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தமக்கு வாக்களிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார் .
கொழும்பில் தனது அரசியல் காரியால யத்தில் தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்தார்களே தவிர, அவர்களுடன் மக்கள் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here