எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கமா? வெளியான தகவல்!

0
95

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை மற்றும் மாதாந்தம் காணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்ந்தே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதனால், தற்போதிருந்தே, மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில், தம்மால் தற்போதே கூற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here