எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

0
118

நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாகவே இந்த நிலை ஏற்படக்கூடும் என கூறப்படுகின்றது.

இதற்கமைய தற்போது அமுல்படுத்தப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here