எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
96

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவிதுள்ளார்.

நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளாக இனங்காணப்பட்ட இரத்தினபுரியின் குருவிட்ட, பேலியகொட மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் இஹல கோரல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, எட்டியாந்தோட்டை, தரணியகல, தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here