ரஷ்யாவுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் எத்தகைய சவால்களையும் சந்திப்போம் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் பதட்டம் ஏற்பட்டு இருந்த நிலையில் இன்று காலை ரஷ்யா, உக்ரைன் நாட்டை தாக்க தொடங்கி விட்டது.
இதனால் உக்ரைனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில் உக்ரைன் அதிபர் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து கூறும்போது ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் உக்ரைன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
ரஷ்யாவின் மிரட்டலை கண்டு அஞ்ச மாட்டோம் என்றும் எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்