எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவைப்படும்; அமைச்சர் இராதா!

0
118

இலங்கையில் இன்றைய சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இவை இரண்டும் புதிதாக ஆட்சியை அமைக்க வேண்டுமானல் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்களின் ஆதரவும் இவ் இரு கட்சிகளும் தேவைப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக றை தோட்டம் நிவாசபிரிவு இலக்கம் 05 இல் 29.01.2018 அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரதேச சபைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதனால் நாம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த பிரதேச சபை பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளை நாங்கள் தான் உருவாக்கினோம் என சிலர் மக்களிடம் பொய்களை கூறி வாக்குகளை பெற்று வருகின்றனர்.

மலையகத்தை பொருத்தவரையில் பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி வகுத்த திட்டத்தின் ஊடாக செயல்படுத்தி வருகின்றது. அந்த செயல்திட்டங்களில் பாரியளவில் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து அபிவிருத்தியும் அடைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையில் தனி அரசாங்கம் அமைத்தக்கொள்ள போவதாக இரு கட்சி தலைவர்களிடத்தில் பேச்சுகள் இடம்பெறுகிறது.

ஆனால் இந்த இரு கட்சி தலைவர்களும் தனியாக அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தனியான ஆட்சியை நடத்த இருக்கின்ற 96 உறுப்பினர்களுடன் மேலும் பல உறுப்பினர்கள் வேண்டும் என்பதால் நாம் அவர்களுக்கும் அவசியமாவோம்.

பிரதமர் தனி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் எமது உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். இவ்வாறான நிலையில் நாம் சக்தியுடையவர்களாக இருக்கின்றோம்.

அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியை எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றியடைய செய்து மேலும் எமது சக்தியை உணரப்படுத்தவோம் என்றார்.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here