எனது பெயரை வைத்து லஞ்சம் வாங்குபவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள்; அமைச்சர் ராதா!

0
159

எனது பெயரை பயன்படுத்தி வடகிழக்கு மலையகம் உட்பட பல இடங்களிலும் பணம் அறவிடப்படுவதாக எனக்கு புகார் கிடைத்துள்ளது. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் எனது இனைப்பாளராகவோ அல்லது வேறு எந்த பதவிக்கோ நியிமக்கவில்லை எனவே தயவு செய்து எனது பெயரை குறிப்பிட்டு பணம் அறவிடுகின்றவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றவுடன் எனது அமைச்சின் கீழ் வருகின்ற பிரத்தியேக செயலாளர், இணைப்புச் செயலாளர்,ஊடக செயலாளர் போன்ற பதவிகளுக்கு என்னால் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கு எமது அமைச்சின் மூலமாக வழங்கப்படுகின்ற அடையாள அடடைகளும் வழங்கப்பட்டுள்ளன.அது தவிர நான் எந்தவிதமான இணைப்பாளர்களையோ அல்லது வேறு எந்த பதவிக்குமோ நான் யாரையும் நியமிக்கவில்லை.ஆனால் ஒரு சிலர் எனது பெயரை பயன்படுத்தி எனது இணைப்புச் செயலாளர்கள் என்றும் எனக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறிக் கொண்டு பல வழிகளிலும் பணம் அறவிடுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியும் ஒரு சிலர் பணம் பெற்றுக் கொள்வதாகவும் பல பகுதிகளில் இருந்தும் புகார் கிடைத்துள்ளது.தயவு செய்து அவ்வாறானவர்களிடம் பணம் கொடுப்பதையோ அவர்களின் வார்த்தைகளை நம்பியோ ஏமாந்துவிட வேண்டாம்.அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பாளி அல்ல.அவ்வாறானவர்கள் தொடர்பில் என்னிடமோ அல்லது நேரடியாக பொலிஸ் நிலையத்திலோ புகார் செய்யலாம்.உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நேரடியாக கொழும்பில் எனது அமைச்சிலோ அல்லது நுவரெலியாவில் உள்ள எனது காரியாலயத்திலோ சந்திக்கலாம்.

எனது பெயரை பயன்படுத்தி போலி பரீட்சை வினாத்தாள்களும் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.விசேடமாக இந்த நடவடிக்கை யாழ் பகுதியிலேயே ஒரு சில விசமிகளால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக நான் பொலிஸ் நிலையத்திலும் பரீட்சை திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன்.எனவே இது தொடர்பாக பொதுமக்கள் கவனமாக நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பா.திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here